ஞாயிறு, பிப்ரவரி 26

மைண்ட் வாய்ஸ்


"என்ன இவ்வளவு காலதாமதமா வரீங்க",

இன்னம்பூர் தம்பி, இன்னிக்கு மாசி சிரவண பறப்பாட்டுக்கு லேட்டா வந்த மண்டையுடஞ்ச அய்யர் வீட்டு பேரன்ன்னு ஊரில கூப்பிட்டுக் கொண்டிருக்கும், ஶ்ரீரங்கத்தில் இருந்து ஶ்ரீரங்கம் ஶ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாம பாராயண சபா அங்கத்தினர்கள் இருபது பேருடன் வந்திருக்கும் கிருஷமூரத்தியைப் பாரத்து கேட்டான்.

 "கும்பகோணம் ஶ்ரீ ஸாரங்கபாணி ஸ்வாமியை சேவிக்கலாம்னு போனோம், அவர் எங்களுக்கு தரிசனம் கொடுக்க கொஞ்ச நாழி ஆயிடுத்து, அதான் லேட் தம்பி ,மன்னிச்சுக்கோ",

சினிமாவுல சொல்லுவாங்களே, உன் கைய காலா நினைச்சு கேட்கிறேன்னு, அதுமாதிரி, கிருஷ்ணமூரத்தி, தம்பிய பாத்து கெஞ்சிண்டு இருக்கான்.

"அதெல்லாம் சரி, பெருமாள ஏளப்பண்ண, அதான் வீதியுலா பண்ண, உங்க நண்பர்கள் ஒத்தாச பண்ணுவாங்கன்னு சொன்னயே, ஏற்பனவே நேரம் அதிகமா ஆயிடுச்சு, வாங்க ரெடியாகலாம்" தம்பி சொலறான் "

, எல்லாரும் ரெடிதான்

கிருஷ்ணமூர்த்தி கண்ணால பக்கத்திலெ இருக்கிற நண்பர்களை பாக்கிறான். அவர்கள் அப்படி யாருப்பா நானும் பார்க்கிறேன்.

பாத்தவுடன் எனக்கு ஷாக்கா ஆயிடுச்சு.

பின்ன நானும் 4 ம்ணியில் இருந்து பட்டாச்சாரியார் சூப்பரா அலங்க்காரம் பண்ணி வீதியுலாவுக்கு ஒவ்வொரு சிரவணத்துக்கும் ஏளப்பண்ணுவதற்க்கு என்று வரும் மாண்வர்கள்,  இன்னைக்கு வரல, இன்னைக்கு இவங்க தான்னு சொல்றதக் கேட்ட்தும் எனக்கு  திக்ன்னு ஆயிடுச்சு. வயத்துல புளிய கரைச்சமாதிரி இருந்துச்சு. (ஏற்கனவெ பிரசாத்த்துக்குன்னு புளி கரைச்சு சூப்ப்ர் புளியொதரை பண்ணி வச்சு இருக்கா. ஒரு பிடி பிடிக்க போறேன்னு சொல்றது தனிக் கதை.)


 இவர்கள் தான் இன்னைக்கு என்னை வீதியுலாவுக்கு ஏளப்பண்ண போறாங்களா?ஏன்னு பாக்கிறீங்களா? கிருஷ்ணமூர்த்தின்னு சொல்றவர் போன வருஷம் வண்டியில போறபோது அடிபட்டு இப்பத்தான் தேறி வந்துள்ளார். இன்னொருத்தர் நாலு மாசம் முன்னால இடுப்பு வலின்னு டிராக்கிங்கெல்லாம் போட்டுண்டு வந்தவர். மூணாவது நபர் எப்பவும் உடம்பு சரியில்லைன்னு சொல்றவர்.. நாலாவது நபர் நடக்கும் போது கொஞ்சம் கஷ்டப்படுவார். இப்படி வந்திருக்கிறவங்களை வச்சுண்டு நான் வீதியுலா!!!!!ன்ன பண்னறது? இன்னிக்கு இவங்க்கிட்ட மாட்டியாச்சு,

நாமளா பாத்து எதாவது செய்ய வேண்டியது தான்.
என்ன் ஒரு பக்கம் சாயற மாதிரி இருக்கு,

, ஏளப்பண்ணிட்டாங்களா/

ஏம்ப்பா, ஸீரங்கத்திலெ சொல்ற மாத்ரிஎச்சரிகைந்னு முன்னால சொல்லக் கூடாது? கொஞ்சம் சுதாகரிச்சுண்டு இருப்பேன் இல்லையா/

அது சரி, முன்னெபின்னே இவங்க ஏளப்பன்னி இருந்தாங்கன்னா தெரியும், இவங்க்கிட்ட அதெலாம் எதிர்பாக்க கூடாது.

நாம தான் சரி பண்ணிக்கிடனும்.

அய்ய்ய்யோ, என்னப்பா இப்ப அந்தப் பக்கம் சாய்க்கிறீங்க. வாசல் வற வரைக்கும் கையால் ஏளப்பண்ண்ணும் எப்படித் தெரியும். குடையை கொஞ்ச்ம் தூக்கிப் பிடிங்கப்பா, நான் எல்லாரையும் பாக்கணும் ஆசீர்வாதம் பண்ண்ணும் இல்லையா?

இவங்க கிட்ட நான் வந்து மாட்டிக்கிட்டேங்கறதை நினைச்சு கிருஷ்ணமூர்த்தி மனைவியைப் பாரு, உள்ளூற சிரிக்கிறா!!!! இருக்கட்டும், நான் இன்னக்கு அவளுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி, என்ன இருந்தாலும் அவ இந்த ஊர் பொண்ணு இல்லையா, மன்னிச்சுடுவோம்.

பரவாயில்லை, சரி பண்ணிட்டாங்களே!!!!

என்ன இப்ப ஆடாம, அசையாம போறோம்,
, கத்துகிட்டாங்களா., நாம என்னமோ நினைச்சோம், இவங்க என்ன இன்னைக்கு ஒருவழி பண்ண போறாங்கன்னு பரவாயில்லை, இதுக்கெல்லம் காரணம், சூப்பரா ஸ்டெப் போடறாறே அவங்க தலைவர் ரகுனான் தான் காரணமா இருக்கும்.

என்ன, ஆயக்கோல் எல்லாம் போட்டு பர்ஃபெக்ட்டா நிறுத்தறாங்க, இனிமே எனக்கு கவலை இல்லை, இவங்க வீதியுலா முடிச்சுடுவாங்க!!!!!!
எல்லா வளமும் பெற்று, இதே மாதிரி, ஒற்றுமையா, நன்னா இருக்கட்டும் இந்த கோஷ்டி,
அடிக்கடி வாங்கப்பா,
அதுக்கும் நாம தான் அருள் செய்யணுமாம், கேட்கிறார் பாருங்க, கிருஷ்ணமூர்த்தி
பண்ணிட்டாப் போச்சு, நாம் பண்ணாம யார் பண்ண்ப்போறா?
என்ன அதுக்குள்ள கூப்பிடுறாங்க, பிர்சாதம் அம்சைப் பண்ணப்போறாங்களா! இதோ வந்துட்டேன், இன்னம்பூர் புளியோதரை, சக்கரைப் பொங்கல், சுண்டல் சாப்பிடக் கசக்குமா!!!!
சரி நான் சாப்பிட்டு விட்டேன், நீங்க போய் பிரசாத்த்தை சாப்பிட்டு விட்டு எப்போதும் போல பேக் பண்ற வழியை பாருங்க!!!!!!!!


வியாழன், அக்டோபர் 1

what is your name?what is your name?
what is your name of the school? 
"என்ன சார் எங்களுக்கு ஆங்கில ப் பாடம் நடத்திகிறீர்களா?
"அப்படின்னு கேட் பது காதுல விழுது. 
அப்படி இல்லைங்க, நான் நேத்திக்கு ஒரு வகுப் புக்கு என் பேத்தியுடன் சென்று இருந்தேன். அங்க தான் இந்த மாதிரி சின்ன கேள்விகளை கேட்டு மாணவர்களை அதனை தமிழாக்கம் செய்யச் சொல்லி தமிழ் வகு ப் புகளை , மாணவர்கள் விரும் பும் படி கற்றுக்கொடுக்கிறார்கள். 

இதுல என்ன விஷேஷம்ன்னா, பெரியவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை கவனிக்கிறார்கள். 
நமது ஊரில் தமிழில் பேசுவதே கேவலம் என்று நினைச்சு, தங்கள் குழந்தைகளை கான்வெண்ட், ஆங்கில ப் பள்ளி என்று சேர்க்கும் நிலையில், இதைப் பார்த்தவுடன், மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. 
இதற்காக அந்த ஊரில் உள்ள எல்லா தமிழ் மக்களும் சேர்ந்து குழு அமைத்து தங்களுக்குள் நன்றாகத் தமிழ் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்து, பொதுவான பாடதிட்டம் வகுத்துக் கொண்டு, தங்கள் குழந்தைகலின் தமிழ் வளர்ச்சியில் நல்ல ஈடு பாடு கொண்டுள்ளார்கள். 

வாரத்தின் ஒருநாள், அதாவது வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணிநேரம் தமிழ் வகு ப் புகள் நடத்துகிறார்கள்.
 4 வயது குழந்தைகள் முதல் பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் வரை வயதுக்கு ஏற்ப வகுப் புகள், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே பரிமாற்றம் போன்றவைகள் மூலம் படிப்பு சொல்லிக்கொடுத்தல் போன்றவை இதன் சிறப் புகள் என்றுசொல்லலாம். 
அதெல்லாம் சரிங்க, எங்கே இப்படிநடக்குதுன்னு கேட்கிறீர்களா?
அமெரிக்கா, மெரிலேண்ட் எலிகாட் சிடியில் தாங்க இந்த வகுப்புக்குப் போனேன். 
இவ்ர்கள் அமெரிக்க தமிழ் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இத்தனை சிற ப் பாக நடத்துகிறார்கள்.
இதுல இன்னொரு முக்கியமான விஷயம், எப்படா வெள்ளிக்கிழமை வரும்ன்னு குழந்தைகளும் ஆர்வத்துடன் வரதுதாங்க.
வருஷத்து ஒரு நாள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். 
ஆண்டு விழா நடத்தி குழந்தைகளின் பாட்டு, நடனம், நாடகம் போன்ற திறமைகளையும் வெளிக்கொணர்கிறார்கள் என்றால், இவர்களை ப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
. "தமிழ் இனி மெல்ல சாகும்" என்ற கூற்றை பொய்யாக்கும் இவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
 வாழ்க இவர்களின் தமிழ்த் தொண்டு. 
http://tamiltalent.org/

NASA

NASA.
பேரைக் கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு உற்சாகம் பிறக்கும்
அவர்கள் அனு ப் பிய hubble தொலைநோக்கி இன்னமும் மிக அரிய புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.
அவைகளைப் பார்க்க பார்க்க பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, அதில் நாம் இருக்கும் இடம் எவ்வளவு சிறியது என் பது தெரியவரும்.
அது மட்டுமா, அவகைளை ப் பார்த்தால், ஒண்ணுமில்லாதவைகளுக்கெல்லாம் நாம் 
ப்படி சண்டை போட்டுகொள்கிறோம் என்பது வெட்கப்படவேண்டிய விஷயம். என்னன்னவோ பகரணங்களை வச்சு எல்லாம் தோண்டி தண்ணீர் வருதான்னு பாத்து, கடைசில எங்கல்லாம் தண்ணி கிடைக்காதோ அங்க தோண்டுவோம்.
அவங்க ப்படியா, பாருங்க இங்கிருந்தபடியே செவ்வாய் கிரகத்தில தண்ணி இருக்குன்னு கண்டு பிடிச்சு உலகத்துக்கு நாங்கதான் பெஸ்ட்ன்னு சொல்றாங்க.
ப்படி இருக்கிற, நாசா ஆரம்பிச்சு 75 வருஷத்தை சமீபத்துலெ சிறப்பா கொண்டாடினாங்க. வாஷிங்டன் பக்கத்துலெ இருக்கிற அவங்க இடத்தை சாதாரணமா எல்லோரும் நுழைய முடியாது. ஆனா அன்னிக்கு, அதாங்க, 26-9-2015 , எல்லோரும் வந்து பாருங்கன்னு அழைப்பு விடுத்தாங்க.

கிடைக்கிற சான்ஸ விடலாமா
குடும், நண்பர்கள் சகிதம் கிளம்பிட்டோம்! இதுல என்ன விஷேஷம்ன்னா, வந்து 
பாத்துட்டுப் போறதுக்கு, இலவசமா பஸ் வசதி வேறே செய்து கொடுத்தாங்கன்ன பாருங்க!!!
 'கரும் பு தின்ன கூலியா' , ப்படின்னு நாம சொல்ற மாதிரி, நாங்க கார ஒரு ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, அவங்க கூட்டிண்டு போன ஸ்கூல் பஸ்ஸில் ஏறி, (எங்க குடும்
நண்பர்களே பாதி பஸ்ஸை அடைத்திட்டோம்லெ) அவங்க இடத்துக்குப் போய் சேர்ந்தோம். 
எந்தந்த இடத்துல என்னன்ன பாக்கணும், ப் படிங்கிறதை, சாப்பாடு எங்க கிடைக்கும், அவங்க வச்சுருக்கிற மாடல் போன்றவற்றை, விலாவாரியா, ஒரு படம் மாதிரி போட்டுக் கொடுத்தாங்க. ( படம்)

, இத்தனை பாக்கணுமா, 
ப்பன்னா, நாங்க எங்க முதல்ல போயிருப் போம்?
சரிதான், நீங்க நினைக்கறது தாங்க, நேரே சாப் பாடு மால் தான்.
அதுல அமெரிக்க மக்களை மிஞ்ச முடியாதுங்க, வரிசையில் நின்னு, சமோசா சாட் வாங்கி எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, மிக நல்லதா இருக்கக்கூடிய ஒரு ஸ்டால், 28ந்னு பாத்து, ஒரு வழியாப் போய் சேர மணி 2 ஆகிடுத்துன்னாப் பாத்துக்கங்க.
நாங்க தான் பட்டாளத்தோட போய்இருக்கோமில்ல,
ப்புறம் ப்படி வேகமா பாக்கிறது, மெதுவா ஒண்ணொன்னா பாத்துட்டு, செல்பி எல்லாம் எடுத்துண்டு, இதுல எங்க மாப்பிள்ளை தன்னோட சந்தேகங்களை அங்க இருக்கிற விஞ்ஞானியுடன் பேசித்தீர்த்துக் கொண்டு,
( போட்டோ பாருங்க),
சரி விஷயத்துக்கு வான்னு சொல்றது கேட்குது, வாங்க அடுத்த அறைக்கு ப் போகலாம்ன்னு சொல்லி எல்லோரையும் சேத்துட்டு மணியைப் பாத்தா, ஷாக்காகி ப் போனோம்
பின்ன என்ன, நாசா மக்கள் கடைய கட்டி, வீட்டுக்கு கிளம் பிட்டாங்க!!
மணி 5 ஆயிடுச்சாம்!!!! ப் புறம் ப்படி மத்த அறைகளைப் பாப்பது?
சரி, நாங்களும் எங்க இலவச பஸ் இருக்குங்கிற இடத்தை நோக்கி நகற ஆரம் பிச்சோம்.
எல்லா சோத்துக்கும் ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்களே,

அது போல, 28 போலத்தான் எல்லா அறைகளும் சூப்
பராக இருக்கும்ன்னு மனசுல நினைச்சுண்டு எங்க காரை நோக்கி நகர்ந்தோம்!!!