செவ்வாய், பிப்ரவரி 13

புத்த கயா!!!


போதிமரத்தின் அடியில்


புத்த கயா!!!
இந்தியாவில் புத்த சமயம் ஸ்தாபிக்கப்பட்ட இடம். புத்தர் ஞானம் பெற்ற இடம். கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.
எங்கள் பஸ் எல்லாம் கயாவில் நிறுத்த இடம் கிடைக்காது என்பதால் புத்த கயாவில் எல்லோரும் தங்கினோம்.
புத்த கயாவில் புத்தருக்காக பல நாடுகள், புத்த மதம் பின்பற்றக்கூடிய நாடுகள் கலாச்சாரத்தை பரப்ப கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
புத்தர் எங்கு ஞானம் பெற்றாறோ அந்த போதி மரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தடவை பார்க்கப்பட வேண்டிய இடம்.
எங்களுக்கும் கயாவில் ஸ்ராரத்தம் போன்ற காரியங்கள் எதுவும் இல்லாததால், புத்த கயாவை நன்கு சுற்றிப்பாரத்தோம். அதன் பிறகு கயா சென்று அங்குள்ளவைகளை பார்த்தோம்.
அதைப்பற்றி முன்னறே சொல்லிவிட்டேன்.
கயாவை விட்டு அடுத்த ஷேத்ரம் நோக்கி எங்கள் அடுத்த பயணம் தொடங்கியது.
அடுத்த ஷேத்ரம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம், இந்தியர்களின் நாடித்துடிப்பான இடம்.
பார்ப்போம்!!!!

கயா, புண்ணிய பூமி.


கயா, புண்ணிய பூமி. 
மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். அதிலும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது  வடஇந்தியாவில் உள்ள கயா ஷேத்ரத்துக்கு சென்று  தாய், தந்தைக்கு ச்ரார்த்தம் செய்தால் புண்ணியம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றனவாம்.
இதுக்கு கதை உண்டாம்.
என்ன கதை?
கயன் என்னும் அசுரன், 10 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டவன், எந்த பிரதிபலனையும் எதிரபார்க்காமல் தொடர்ந்து தவம் புரிந்து வந்தான். இதனை மெச்சிய திருமால், அவன் உடல் அனைத்து புண்ணிய நதிகளையும் விட புனிதமானதாக இருக்கும் என்று ஆசிர்வதித்தார். ஆனால் அவன் தவத்தை நிறுத்துவதாக இல்லை. அதனால உலகமே நடுங்கிற்று. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, ப்ரம்மா கயனிடம் சென்று, தான் யாகம் செய்வதற்கு கயனின் புனிதமான உடலை வேண்டினார்.  உடன்பட்ட கயன் தூங்கும்போது ப்ரம்மா யாகத்தைத் துவங்கினார். யாகம் முடிவடையும் தருவாயில் கயன் எழுந்திருக்க முற்பட, தேவர்கள் தர்மவதி சிலையை அவன் மேல வைத்து அழுத்தினர். அவன் உடல் நடுக்கம் நிற்காததால், விஷ்ணு கதையை கையில் ஏந்திக்கொண்டு, கதாதரன் பெருமாள் வடிவில் தன் ஒரு திருவடியால் அவன் மேல் நிற்க நடுக்கம் அடங்கியது. 
அவன் உடல் கிடக்கும் 10 சதுர மைல் பரப்பு இன்று கயா ஷேத்ரம் என அழைக்கப்படுகிறது. 
தர்மவதி சிலை வரையப்பட்ட விஷ்ணுவின் ஒரு திருவடியைத் தான் நம் இல்லங்களில் பிண்ட தானம் செய்ய விஷ்ணுபாதமா பயன் படுத்தறோம்.
கயா ஷேத்ர மகிமையே இதுதான்.
கயாவில் பல்குனி நதி, விஷ்ணுபாதம், அக்‌ஷ்ய வடம் ஆகியவை முக்கியமானவை. நெல்லிக்கனி அளவு உள்ள பிண்டம், கயாசிரஸ் என்ற இடத்தில தானமா கொடுப்பதால், தகப்பனார், தாயார், மனைவி, சகோதரி, பெண், அத்தைகள், தாயின் சகோதரிகள் ஆகிய இந்த ஏழு குடும்பங்களின் 101 பேர்களை நல்ல கதி அடையச் செய்யுமாம்.
கயா ஷேத்ரம் பல விதங்களில் முக்கியமானது.
தந்தை, தாய், உறவினர், வம்சத்தில் வந்தவர்கள் நற்கதி அடைவாரகளாம்.
பலவித நரகங்களை அடைந்தவர்கள், பறவை, புழு, கிருமி, மரம் ஆகிய பிறவிகள் அடைந்தவர்கள், மனிதப்பிறவிய அடைய காத்திருப்பவர்கள் நம் வம்ஸத்தில் ஸ்ராரத்தம் பிண்டம் ஆகியவற்றை பெறாதவர்கள், இவற்றைச் செய்ய உறவினறே இல்லாதவரகள், மேலும் இவர்கள் இருந்தும் கருமங்கள் செய்யப்படாதவரகள் ஆகியோருக்கு இங்கு பிண்டம் கொடுப்பதால் நற்கதி அடைவார்களாம்.
உறவினர்களில் தாயாருக்கு அதிக முக்கியத்துவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மகன் பிறக்கவில்லை என்று தன் தாய் பட்ட கஷ்டத்தை நினைத்து, கர்ப்பத்தை தரித்ததால் தாய்க்கு உண்டான கஷ்டங்களை நினைத்து, கர்ப்பம் வளர்ச்சியடையும் ஒவ்வொரு மாதத்திலும் உண்டாகும் கஷ்டத்தை நினைத்து, கர்ப்ப காலத்தில் கை கால்களால உதைத்த போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, நிறை மாதத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, குழந்தை பிறந்தபிறகு தாய்ப்பால் கொடுக்க கஷ்டத்தை நினைத்து,
இப்படி தாய்க்கென மற்றவர்களை விட அதிகமான பிண்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அர்த்ததை  சொல்லி புரோகிதர், வைக்கச் சொல்லும் போது எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவனுக்கும கண்ணில் நீர் வராமல் இருக்காது.
பல்குனி நதியில் ஆறு மாதம் நீர் வராது.  நீர் வராத காலங்களில் ஊற்று நீர் உண்டாக்கி, அதில் பிண்டத்தை கரைப்பார்கள். 
பல்குனி நதிக்கரையில் உள்ள முக்கியமான கோயில் விஷ்ணு பாதம். இங்கு விஷ்ணுவின் திருவடி உள்ளது. இக்கோயிலின் வெளியே கயா மண்டபத்தில் ஸ்ராரத்தம் செய்து, அக்ஷ்ய வடம் என்று சொல்லக்கூடிய ஆலமரத்தின் அடியில் பிண்ட தானம் செய்வார்கள்.
ஆக இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷேதரத்தில் எங்களுடன் வந்த நிறையபேர் ஸ்ராரத்தம் செய்து தங்கள் முன்னோர்களை கரை சேர்ந்தார்கள். அதற்கு உதவிய ஸ்வாமிகளை என்றும் மறுக்கமுடியாது.
நான் முன்னறே ஒரு தடவை செய்து விட்டதால், இந்த முறை ஸ்ராரத்தம் செய்யவில்லை.
நாங்கள் பல்குனி நதியை நோக்கிச் சென்றோம், முன்னறே சொன்னது போல நீர் குறைவாகத்தான் இருந்தது. ப்ரோக்‌ஷித்து கொண்டோம். கதாதரப் பெருமாளை சேமித்துக் கொண்டோம். 
கதாதர் கோயில்
விஷ்ணுபாதம், அக்‌ஷ்யவட ஆலமரத்தை வலம் வந்தோம். 
ஸ்வாமிஜி ஸ்ராரத்தம் செய்தவர்கள், செய்யாதவர்கள் என இரு பிரிவினருக்கும் ஏற்ப ஆகாரம் தயார் செயதிருந்தார்கள். 
முன்னதாக நாங்கள் தங்கி இருந்தது புத்த கயா, கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லும் தொலைவில் உள்ளது.
புத்த கயா, என்ன விஷேஷம்???
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!

புதன், பிப்ரவரி 7

இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி:


இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி: 
நேரா கோயிலை நோக்கி வண்டிய நகர்த்த சொன்னேன் சென்ற பகுதியில.
ஏன் சார் மீண்டும் கோயில்?
ஆமாம், முன்னாலேயே சொல்லியிருந்தேனே, கொடியேற்றம் முக்கியமானது
ஜகன்னாதர் கோயில் கொடியேற்றம் உலகப்பிரசித்தி பெற்றது  அதைப்பற்றி முன்னறே எழுதியுள்ளேன்.
அவ்வளவு உயரம் உள்ள கோபுரத்தில் எவ்வாறு ஏறுவார்கள் என்று ஆர்வம்.
மணி ஆகிக்கொண்டே இருந்தது. டிரைவர் “போய் விடலாம் சார்” என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார்.
கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரை நிறுத்தி இறக்கிவிட்டார்.
எதிரே வரும் நபரை விஜாரித்ததில், “முன்னறே கொடியேற்றம் முடிந்துவிட்டது” என்றாறே பாக்கணும். யார் முகத்திலும் ஈயாடவில்லை.

இதுக்கு நடுவில் ஸ்வாமிகள் கோயில் முகப்பில் இருந்து பக்தர்களுடன் வீதிப் பிரதிக்‌ஷிணம் போய்க் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு, நாங்களும் அதில் கலந்துகொண்டு முடிவில் வீதியின் முடிவில் உள்ள குண்டிசா மந்திரை அடைந்தோம். பெரிய மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவில் ஸ்வாமிகளின் உபன்யாசம் நடந்தது.
இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தோம். மறுநாள் விடியற்காலை ஊரைவிட்டு கிளம்பி, இடையில் சாகஷி கோபால் சன்னிதியை தரிசித்துவிட்டு, அன்று இரவோ அல்லது மறுநாள் காலை எங்களின் அடுத்த திவ்ய தேசமான கயா அடைவதாக ப்ளான்.
எல்லாம் சரியாக இருக்க விடியற்காலை எங்கள் சாமான்களை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் பயணமானோம்.
சாக்ஷி கோபால் சந்நிதி

அருகிலேயே இருந்தது சாகஷி கோபால் சன்னிதி.
பூரிக்கு வருபவர்கள் சாக்‌ஷி கோபால் சன்னதிக்கு வந்து அட்டடண்ஸ் கொடுத்துட்டு போகணுமாம், இல்லைன்னா யாத்திரை பூரத்தியாகாதாம்.
எதுக்கு வம்புன்னு எல்லாரும் ஒரு விஸிட் பண்ணிடுவாங்களாம்.
சின்ன கோயில் தான். வரிசையில் நின்று பெருமாளை சேவித்தோம்.
1400 பேரும் சேவித்து அங்கேயே ஸ்வாமிகள் ஏற்பாடு செய்து இருந்த (அதுவும்  தான் இந்த டூர்ல விஷேஷம்) காலை உணவை முடித்துக்கொண்டோம்.
பஸ்ஸில் ஏறி உட்காந்தோம், அடுத்த. திவ்யதேசம் கயா.
கிட்டத்தட்ட 18மணி நேரப் பயணம்.
கயா, ஆசையை துற என்று உபதேசம் செய்த புத்தரின் போதி மரம், மற்றும் உபதேசம் செயத இடம் மற்றும் இந்துக்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் முக்கியமான இடம் ஆகும்.
எல்லா காலங்களிலும் முக்கியமான இடம்.
எங்கள் வண்டி பல மணி நேரத்துக்கு பிறகு, ஒருவழியா புத்த கயா வந்து சேர்ந்தது  கயாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்த கயா. எங்கள் எல்லா பஸ்களும் கயாவில் நிறுத்தமுடியாது என்பதால் புத்த கயாவை நோக்கி எங்கள் பயணம் முடிந்தது.
கயாவில் என்ன விஷேஷம்?
சனி, பிப்ரவரி 3

இராமானுஜா அனு யாத்திரை:ஐந்தாம் பகுதி சூரிய கோயில்.

சூரிய கோயில், அதாங்க கொனாரக், மிகவும் பிரபலமான கோயில், அத நோக்கி எங்க வாகனம் பறந்து கொண்டிருந்தது. பூரி ஜகன்னாதரை தரிசித்து விட்டு, ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோம். இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொனாரக். ஒடிசாவின் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான இடம்.
போகும் வழியில் கடற்கரை உள்ளது. சந்திரபாகா கடற்கரை என்று அதனைச் சொல்வார்கள். அதனை வரும்போது பார்த்துக்கொள்ள தீர்மானித்து நேராக கொனாரக் நோக்கி பயணமானோம்.
தூரத்தில் இருந்தே பார்க்கும் போது அதன் பிரம்மாண்டம் தெரிகிறது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. guide ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டோம்.
முன் பக்கத்தில் இருபக்கமும் இரண்டு சிங்கங்கள், ஒவ்வொன்றும். ஒரு யானையைக் கொல்வது போலவும், அதற்கு கீழே மனிதன் இருப்பது போலவும் படைக்கப்பட்டுள்ளது.
இது மனிதனை, அவனின்  அகந்தை, மற்றும் செல்வம் அவனை அழித்துவிடும் என்பதை குறிப்பதாக அந்த கைடு சொன்னார்.
எத்தனை உண்மை!!!


24 சக்கரம் கொண்ட ஒரு சூரியனின் தேரை 7 குதிரைகள் இழுத்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பல முஸ்லிம் மன்னர்களால் சின்னாப்பின்னமாக்கப்பட்டு தற்போதய நிலையில் உள்ளது. நரசிம்மதேவா I மன்னரால் 1200 கலைஞர்கள் உதவியுடன் 12 ஆண்டுகள் கால அவகாசத்தில் கட்டப்பட்டதாம். ஒவ்வொரு சக்கரமும் 10 அடி விட்டம் கொண்டதாம்.ஒவ்வொரு இன்ச் கல்லும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களா இருக்கும் இந்த அமைப்பு, கீழ் தளத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைக் கவரும் வகையிலும், நடுவரிசை ஆண் பெண் ஆகியோர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், மேல தளம் வயதானவரகளுக்கும் என பிரிக்கப்பட்டு உள்ளது.
கட்டடம் கட்ட எப்படி பொருட்கள் எடுத்து செல்கிறார்கள்
குழந்தை எப்படி பிறக்கிறது என்பதை விளக்கும் சிற்பம், வேட்டையாடும் சிற்பம்,
வேட்டையாடும் சிற்பம்
எப்படி கட்டிடம் கட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டன என்பதை விளக்கும் சிற்பம், இப்படி பல சிற்பங்கள் இருப்பதை கைடு விளக்கும் போது ஆச்சர்யம் ஆனோம்.
இது மட்டுமா?
அந்த காலத்திலேயே நேரத்தை காட்ட கருவிகளை அமைத்திருந்தாரகளாம்.
ஏற்கனவே நான் சொன்னேனே, அந்த 24 சக்கரம், அது தான் நேரத்தை காட்டக்கூடியதாக அமைத்து இருந்தார்கள்.
24 சக்கரத்தில் எஞ்சியது ஒன்று தான். அதை நம்ம கைடு எப்படி நேரத்தை காண பயன்படுத்தினார்கள் என்பதை பிரமாதமா விளக்கினார்.
 சக்கரம் காட்டியிருக்கேன்.


சக்கரத்தில் மொத்தம் 8 குறுக்கே போகும்  தண்டுகள் மையத்திலிருந்து செல்கின்றன இல்லையா, அவை ஒவ்வொன்றும் மூன்று மணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு நாளின் 24 மணிக்கு இணைக்கப்படும். சூரியனின் ஒளி மையத்தில் உள்ள அச்சில் விழுந்து, அதன்  நிழல் எங்கு விழுகிறது எனபதைப் பொறுத்து நேரத்தை சொல்கிறார். இது மட்டுமா, நிமிஷத்தை சொல்ல, சக்கரத்தின் சுற்றாக புள்ளி மாதிரி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். 60 புள்ளிகளை வைத்து, நிழல் எப்படி விழுகிறது எனபதைப்பொறுத்து மணி என்ன என்பதைத் துல்லியமாக நம்ம கைடு சொன்னவுடன் ஆச்சரயத்தின் எல்லைக்கே நாங்க போயிட்டோம்ன்னா பாருங்க!!!!!
ஏன் ஐயா 7 குதிரைகள் உள்ளன? 24 சக்கரங்கள் ஏன்? இவைகள் வாரத்தின் ஏழு நாட்களுக்கும், ஒரு நாளின் 24 மணிக்கும் என்பதற்காக  தான் அவைகள் வைக்கப்பட்டுள்ளன என்றாறே?
இருக்கும் மேலே என்ன வேண்டும் சூரிய கோயிலை விளக்க!!!!!
சக்கரத்தை பற்றிய தனியாரின் விடியோ  நன்றியுடன் பகிரப்படுகிறது
பிரமிப்பில் இருந்து மீண்டோம். நேரம் போனதே தெரியவில்லை.
கைடுக்கு விடை கொடுத்து விட்டு பூரியை நோக்கிக் கிளம்பினோம்.
வரும் வழியில் சந்திரபாஹா பீச் உள்ளது. பிரமாதமா உள்ளது. மாற்றுத்துணி கொண்டு போய் இருந்தால் குளித்து இருக்கலாம். இங்கு தான், ஒடிஷாவின் பிரசித்தி பெற்ற மணல் சிற்பங்கள் உருவாக்குகிறாரகளாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை அவைகளைப் பார்க்க!!!
மணி 5ஐ நகர்ந்து விட்டது.
அப்புறம் என்ன செய்தீர்கள்?
நேராக கோயிலை நோக்க வண்டியை செலுத்தச் சொன்னோம் டிரைவரிடம்.
மீண்டும் கோயிலில் என்ன?
பொறுத்தார பூமியாள்வார் இல்லையா?

வெள்ளி, பிப்ரவரி 2

ராமானுஜா அனு யாத்திரை: பூரி நான்காம் பகுதி. கொடியேற்றம்

ராமானுஜா அனு யாத்திரை: பூரி நான்காம் பகுதி. கொடியேற்றம் 
சென்ற பகுதிகளில் பூரி ஜெகன்னாதர் ஷேத்ரம் பற்றி விரிவாப் பார்த்தோம். உலகப் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை, பிரசாத மகிமை போன்றவைகள் விஷேஷம். 
அடுத்து மற்றொரு முக்கியமானது கொடியேற்றம்.
ஆம், ஜென்னாதரின் விமான கோபுரம் 214 அடி உயரமாம். அதன் மேல நீல சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சுற்றளவு மட்டும் 36 அடியாம். எட்டு உலோகங்களால் ஆனதாம். இதன் மேல சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணத்தில் எப்போதும் பறந்துகொண்டிருக்கும்.
தினமும் மாலை 6.30 மணி அளவில், கருட சேவகர்கள் என்று சொல்லப்படும் பரம்பரையில் வந்தவர்களில் ஒருவர், அனைத்து கொடிகளையும் சுமந்து கொண்டு, கோபுரத்தில் எந்த யந்திரத்தின் உதவியும் இல்லாமல், 15 நிமிஷங்களில் பணிகளில் ஏறி, அடுத்த 10 நிமிஷத்தில் கட்டிவிடுவார். அதனை தரிசிக்க பக்தர்கள் திரண்டு இருப்பார்கள் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள். 

கனத்த மழை, சூறாவளி அடித்தாலும் கொடி கட்டும் நிகழ்ச்சி தடைபட்டது கிடையாதாம். இதற்காக 8 வயது முதற்கொண்டு பரம்பரையில் வந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமாம்.
ஆக ரத யாத்திரை, பிரசாதம், கொடியேற்றம் போன்ற இத்துணை விஷேஷம் கொண்ட பூரி ஷேத்ரம், நிறைய கோயிலகளைக் கொண்டது. இதில் முக்கியமானது 
குண்டிஸா மந்திர். 
இது கிராண்ட் ரோட்டின் முற்பகுதியில் உள்ளது. இங்கு தான் முதன் முதலில் தாரு ப்ரம்ஹத்தில் இருந்து ஜகன்னாதர் மற்றும் பல விக்கிரஹங்கள் உண்டாக்கப்பட்டதால், பகவானின் பிறப்பிடம் இது என்று சொல்லலாம். ரதோஸ்தவத்தின் போது எல்லா பெருமாளும் இங்கு தான் எழுந்தருளியிருப்பர். 
ஸாக்‌ஷி கோபால் மந்திர். 

சாக்ஷி கோபால் மந்திர்
சாக்ஷி கோபால் மந்திர் 

ஜகன்னாதர் சந்நிதியில் இருந்து மேற்கே 15 மைல் தொலைவில் உள்ளது, கண்ணணின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள இவரும் வ்ருந்தாவனத்தில் இருக்கும் மதன மோகனரும். இவர் முதலில் ப்ரதான கோயிலில் தான் இருந்தார். அனைத்து ப்ரசாதங்களையும் ஜகன்னாதருக்கு முன்னமயே உண்டு முடித்துவுடுவாராம். எனவே இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டு, அதன் முடிவில் ஊருக்கு வெளியே இங்கு வந்து கோயில் கொண்டுள்ளார் என்பது ஐதீகம்.
கலயாணத்துக்கு சாட்சி சொன்னதாக கதை ஒன்று உண்டு. 
ஒரு அந்தண இளைஞனுக்கு தன்பெண்ணைக் கொடுக்க இசைந்தார் ஒரு முதியவர். பின்னால் பண விவஹாரத்தால் மறுத்து விட்டாராம். அந்த இளைஞன், இவரின் பக்தர். இவரிடம் மன்றாடி கேட்டதின் பேரில், மக்கள் மன்றத்தில் வந்து சாட்சி சொல்லியிருக்கிறார். கல்யாணம் நன்கு நடந்தது.அன்றுமுதல் இவர் சாட்சி கோபால் என்று அழைக்கப்படுகிறார்.

பூரி ஷேத்திரத்துக்கு வந்தோம் என்பதை இவரைப்பாரத்து சொல்லிவிட்டு வரவேண்டுமாம்.
இப்படி இன்னும் பல கோயில்கள் இங்கு உள்ளன. ஒரு வாரம் இங்கு இருந்து எல்லா இடங்களையும் சேமிக்க வேண்டும்.
இப்படி ஊரப்பத்தி சொல்லி வந்ததில், ஜகன்னாதரை சன்னதி திறந்து அவரை  சேவித்து விட்டு வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்பதை சொல்ல மறந்துட்டேனே!!!!
ஏற்கனவே மழை பிச்சுவாங்கி கொண்டு இருந்ததுன்னு சொன்னேன் அல்லவா?
நானும் என் நண்பரும் வெளியே வந்து, எங்கள் நண்பர்கள் வந்துவிடுவாரகள் என்ற நம்பிக்கையில், மழையில் நனைத்து கொண்டே, தங்குவதற்கு இடம் இல்லாததால், நின்று கொண்டே இருந்தோம். அவர்கள் வெளியே வருவதாகத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட அரை பணி ஆகியிருக்கும். ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமானது போல இவர்களும் ஐக்கியமாகிவிட்டாரகளோ என்று நினைக்கும் சமயத்தில், ஒருவழியா எல்லோரும் வெளியேவந்தாரகள். மழையும் விட்டு தூறிக்கொண்டு இருந்தது.
எல்லா சன்னிதிகளையும் சேவித்து விட்டு வெளியே வந்தோம். முன்னேற ஜகன்னாதர் சமையல் கட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருந்தபடியால், அந்த வாசற்படிய நோக்கி பயணமானோம். அருகில் தான் இருந்தது. உள்ளே நுழைய கட்டணம் உண்டு. கேள்வி பட்ட மாதிரியே பெரிய சமையல்கூடம் தான்.


அசந்துவிட்டோம். மழை முழுதும் நின்று விட்டதால், வெளியே வந்து கடைகளை நோட்டம் விட்டோம். வேண்டியத வாங்கினோம். தங்கிய அறைக்கு வந்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தோம்.
அருகிலேயே சூர்யனின் கோயில் இருப்பதை கேள்விப்பட்டு, இங்கிருந்து அங்கு செல்ல ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்து கொண்டோம்.
20 மைல்கல் தொலைவில் SUN TEMPLE எனப்படும் KONARK உள்ளது.
என்ன என்ன பாரத்தீரகள் அங்கு?
அடுத்த பகுதியில்,!!!!

இராமானுஜா அனு யாத்திரை; பூரி மூன்றாம் பகுதி..மகாபிரசாதம்


இராம்னுஜா அணு யாத்திரை; பூரி மூன்றாம் பகுதி..
சென்ற பகுதியில் தேர் திருவிழா பற்றி கூறியிருந்தேன். அதுமட்டுமல்ல, 
வேறு ஒன்றும் விஷேஷம், அது மகாபிரசாதம்.
அப்படி என்ன சார் முக்கியம் பிரசாதத்தில்?
கேட்பது நியாயம் தான்!
கதையை கேளுங்கள், பின்னால் சொல்லுங்கள் நியாயமா இல்லையான்னு.
உலகில் ஜகன்னாதருக்கு நைவேத்தியம் பண்ணப்பட்ட பிரசாதம், யாருக்கும் கிடைக்காமல் இருந்தது. அதனை சமைத்து கண்டருளப்பண்ணும் மஹாலக்ஷ்மியிடம் நாரதர் தனக்கு பிரசாதம் வேண்டும் என நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியில் மஹாலக்ஷ்மி மனதுவைத்து பெருமானிடம் மன்றாடி நாரதருக்கு சிறிது பெற்றுக்கொடுத்தார். ஆனந்தத்தின் எல்லைக்கே போன நாரதரைப் பார்த்த பரமசிவன் தனக்கும் வேண்டினார். நல்லவேளையாக பிரசாதம் சிறிது இருக்கவே அதனை பரமசிவன் உண்டு ஆனந்தக்கூத்தாடினார். கைலாசமும், மஹாமேருவும் குலுங்குவதைக் கண்ட பார்வதி தனக்கும் பிரசாதம் வேண்டினார். ஆனால் பிரசாதம் இல்லாத்தைக் கண்டு கோபித்த பார்வதி அம்மையார், “இனி உலகில் அனைவருக்கும் ஜகன்னாதர் பிரசாதம் எப்போதும் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று சூளுரைத்தார். அவரது பக்தியை மெச்சிய பகவானும் “இனி பூரியில் அன்ன ப்ரஹம்மாகவே இருப்பேன்” என்று அருளினார்.
ஆக, மற்ற ஷேத்ரங்கலில் பெருமானை தரிசித்தாலோ, த்யானித்தாலோ, வலம் வந்தாலோ, ஸங்கீரத்தனம் செய்தாலோ, கிடைக்கும் புண்ணியம், பூரியில் ஜகன்னாதர் பிரசாதத்தை உண்பதாலேயே பாவங்கள் விலகிவிடுமாம்.
அப்படி ஒரு விஷேஷம் பூரி ஜகன்னாதர் திருத்தலத்துக்கு என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
அது மட்டுமா?
சமையல் கட்டு எப்படி?
மிகப்பெரிய சமையல் கட்டு!!
ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள, இந்த சமையல் கட்டு, கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. மூன்றுக்கு நாலு என்ற அளவு கொண்ட 752 அடுப்புகள் உள்ளன. விற்கு கட்டைகள், சட்டி பானைகள் தவிர எந்த விதமான உலோகங்களோ எந்திரங்களோ பயனபடுத்தப்படுதில்லையாம். சுமார் 20 படிக்கட்டு இறங்கினால் இருக்கும் கிணற்றில் இருந்து, இராட்டினத்தைப் பயன்படுத்தாமல் கைகளால் தாம்புக்கயிற்றைப் பயன்படுத்தி 30 தொண்டர்கள் சுத்தமான தண்ணீரை கொண்டுவந்து கொட்டுவார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், தக்காளி ஆகிய காய்கறிகளைப் பயன்படுத்தாமல் 400 முக்கிய கைங்கரயபரர்கள் மற்றும் 400 உதவியாளர்களும், சமைக்கிறார்கள். காய்கறி திருத்தவும், தேங்காய் திருவவும் 100 பேர் உள்ளனராம். வேற்று மனிதர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
சாதாரண நாட்களில் 72 குவிண்டாலும்,விஷேஷ நாட்களில் 90 குவிண்டாலும் சமைக்கப்படுகின்றனவாம். பாறைகளில் ஏற்றப்பட்டுசிறு உறிகளில் ஏற்றப்பட்டு மூங்கில் கம்பிகளின் இருபுறமும் தொங்கவிடப்பட்டு கைங்கர்யபரர்கள் தோளில் சுமந்துகொண்டு பெருமான் முன்னே  படைப்பார்கள். இதற்கென 60 பேர் உள்ளன்றாம்.
இது மட்டுமா?
ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றனவாம். சித்ரான்னம்  9 வகையாம், கறியமுது மற்றும் கூட்டு வகை 14 வகையாம், பால் பாயாசம் 9 வகையாம், 11 வகையான தித்திப்பு வகைகள், 13 வகையான  திருப்பநியாரங்கள்.
பாத்திங்கள்ள?
இது மட்டுமா? 
ஐந்து வகையான போகங்கள் பெருமானுக்கு வெவ்வேறு நேரங்களில் படைக்கப்படுகின்றனவாம்.
கோபால் வல்லப போகம் காலை 8 மணிக்கு முதல் போகம்.
காலை 10 மணிக்கு ஸகல போகம்.
பகல் 11 மணிக்கு போக மண்டப விநியோக போகம்.
மதியம் 12.30 மணிக்கு மத்யாஹ்ந போகம்.
மாலை 7 மணிக்கு ஸயன போகம்.
இரவு 11.15 மணிக்கு மகாசிருங்கார போகம் 
இப்படி ஒரு நாளைக்கு பெருமான் இத்தனை விதமான அமுது சாப்பிடுகிறார என்றால் பாத்துக்கங்க!!!
இதைத்தவிர வேறென்ன விசேஷம்?
பாப்போமே அடுத்த பகுதியில்!!!!!!!!
with gratitude

http://www.jagannath.nic.in/?q=node/479

https://food.ndtv.com/food-drinks/jagannath-temple-mahaprasad-700-cooks-for-50-000-pilgrims-1202045

திங்கள், ஜனவரி 29

இராமானுசா அணு யாத்திரை; பூரி இரண்டாம் பாகம்,

தேர் திருவிழா: பூரி ஜகன்னாதர் தேர் யாத்திரை விஷேஷமானதாகும். உலகப்பிரசித்தி பெற்றது.

ஆம், அந்த தேர் ஓடற வீதியே, உலகத்திலேயே மிக அகலமான வீதியாம். அப்படின்னா பாத்துக்கங்க!!
எவ்வளவு பெரிசா இருக்கும்ன்னு!!!
மற்ற இடங்களில் உள்ளது போல அல்லாமல், இங்க வருஷாவருஷம் தேர புதுசா பண்ணறாங்களாம்.
ஒரு தேர் இல்லிங்க, மூணு தேர் பண்ணறாங்கன்னா பாத்துக்கங்க!!!!
என்னது மூணு தேரா!!!
ஆமாங்க, ஒவ்வொரு வருஷமும், தேரதிருவிழாவுக்கு இரண்டு மாசம் முன்னால 2188 மரத்துண்டுகள இணைச்சு தச்சர்கள் தேர் பண்ணறாங்க.
ஜெகன்னாதர், பலராமர், சுபத்ரா ஆகிய மூவருக்கும் தான் தேர்.

இதில் ஜெகன்னாதர் தேருக்கு நந்தி கோஷ்ன்னு பேராம். தேரின் உயரம் 45 அடி. சக்கரத்தின் உயரம 7 அடி. எத்தனை சக்கரங்கிறீங்க, மொத்தம் 16. வர்ணம் மஞ்சள். சங்கிகா, ரேசிகா, மோசிகா, த்வாலினி, அப்படின்னு பெயர் கொண்ட நான்கு கதிரைகள், தாருகன்னு பெயர் கொண்ட தேரோட்டி 250 அடி நீளமுள்ள சங்கசூடன் என்ற பெயர் கொண்ட தேரக்கயிறை கொண்டதாம்.
பலராமரின் தேர் தாலத்வஜம் ன்னு பேர். 14 சக்கரங்கள், ஒண்ணொண்ணும் 4.4 அடி உயரம். நீல நிறத்தில் தேரச்சீலைகளைக் கொண்டு, ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்ற பெயர் கொண்ட நான்கு குதிரைகளை, மாதவி என்கிற தேரோட்டி, வாசுகி என்ற வடத்தால இழுப்பதாக அர்த்தம்.

பதமத்வஜம் அப்படீங்கிறது ஸுபத்ராவின் தேரின் பெயர். 4.3 அடி உயரமான இந்த தேர், 12 மாதங்களைக் குறிக்க ஏதுவாக, சக்கரங்களைக் கொண்டு இருக்கும். சிவப்பு வர்ணம் கொண்ட திரைச்சீலைகளை பொருத்தி, ப்ரஜ்ஞா, அநுயா, கோஷா, அக்ரி என்ற நான்கு குதிரைகள் பொருத்தப்பட்டு, அரஜுணன்.தேரோட்டியாக, ஸ்வரணசூடன் தேர்கயிறாக இருக்குமாம். ஸுதர்சனர் இந்த தேர்ல கூட வருவாராம்.
தேர் பவனி: தேர் என்ன நாலு வீதிகள் சுற்றி வரும்ன்னு நினைக்கிறீரகளா?
அதான் கிடையாது. 

பின்ன!!
கோயில் வாசல்ல புறப்பட்டு, கிராண்ட் ரோடுன்னு சொல்ற அந்த வீதி வழியா,அந்த ரோட்டின் கடைசில இருக்கும் குண்டிசா மந்திர் அப்படிங்கிற, 2 மைல் தொலைவில் உள்ள கோயிலுக்குப் போய்ச் சேரும். 
அவ்வளவு தான்!!
எப்ப நடக்குது இந்த தேர் பவனி?
ஆனி மாசம் பெளரணமியில் தொடங்கி ஆடி மாசம் சுக்ல சதுர்தசி அன்னிக்கு முடியும்.
என்ன விஷேஷம்ன்னா, 10 வயசு கண்ணன் கோகுலத்தில் இருந்து பிறந்த ஊரான மதுராவுக்கு வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த விழா நடக்குதாம்.
முதலில் பலராமர், அடுத்து ஸுபத்ரா, கடைசியாக ஜகன்னாதர் ஆகியோர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக தேரில் எழுந்தருளுவர். அரசன் தங்கத் துடைப்பத்தால 
அரசர் ரோடை பேருக்கும் காட்சி
வீதியை பெருக்குவார். தேர்கள் புறப்பட்டு மாலை குண்டிசா மந்திர் அடையும். அடுத்த ஒன்பது நாட்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். எல்லாப் பிரசாதங்களும் இங்கேயேஅமுது செய்யப்படும். வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும் பக்தர்கள் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு சேவிக்கலாம்.
தன்னைவிட்டு சென்று விட்டார் என்று கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு குண்டிசா மந்திர் வந்து, ஐகன்னாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரசமநடக்குமாம்.
ஆனி சுக்ல தசமி அன்று, மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருளுவர்.
ஆனால், லக்ஷ்மியின் கோபத்தால் (மட்டையடி உற்சவம்) ப்ரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பர்.
ஆனி சுக்ல ஏகாதசியன்று, இரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்கள் மூர்த்திகள் அணிவர்.இதனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனி சுக்ல துவாதசியன்று பெருமாள் கோயில் உள்ளே எழுந்தருளுவார்.
ஆக ஜகம் புகழும் இந்த தேர் திருவிழா காண உலகமெங்கும் இருந்து பக்தர்கள் படையெடுப்பர் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.

இது மட்டும் இங்கு விஷேஷம்??? 
வேறு என்ன சார் விஷேஷம், பாரப்போமே அடுத்த பகுதியில்!!!!!
போடோக்களுக்கு நன்றிகள்.