வியாழன், ஏப்ரல் 22

நாங்கள் அமெரிக்கா போகப் போறோம்







அமெரிக்க காட்சிகள்








நயுயார்க் காட்சிகள்






நியுயார்க்கின் இரவுக் காட்சி .
நாங்க அமெரிக்கா போகப் போறோம்.


உலகத்துக்கெல்லாம் யார் சொன்னார்கள் "நாங்கள் அமெரிக்கா போகப் போறோம் "என்று தெரியவில்லை .யாரைப் பார்த்தாலும் என்றைக்கு கிளம்புகிறீர்கள் .எந்த வழியாகப் போகப் போகிறீர்கள் என்று எங்களைத் துளைத்து எடுத்து விட்டார்கள்.இது போதாது என்று ,ஒருநாள் , வாசலக் கதவை யாரோ தட்டினார்கள் ஏன் மனைவி கதவைத் திறந்தாள் . "நாங்கள் அடுத்த தெருவில் இருக்கிறோம் .நான் திருச்சியில் பங்கில் வேலை பார்க்கிறேன். .எனமனைவி ஆசிரியராகப் பணி புரிகிறார்."என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார்."சரி,என்ன விஷயமாகப் எங்களைப் பார்க்க வந்தீர்கள் " என்று நான் கேட்டேன் .
"உங்கள் மனைவியின் பிரண்டு நீங்கள் அமெரிக்கா போகப் போவதாகச் சொன்னார்கள் ,அதனால் உங்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தோம் " என்றார்கள் . "நாங்கள் அடுத்த மாதம் போகப் போகிறோம்"என்று நான் சொன்னேன் ."ஒன்றுமில்லை, எங்கள் பெண் us ல் இருக்கிறாள்,நீங்கள் போகும் போது எங்கள் பேரன் பேத்திகளுக்கு சில சாமான்கள் கொடுக்கிறோம் ,அதனை நீங்கள் எடுத்துச் செல்லவேண்டும் ,அவர்கள் வந்து வாங்கிக் கொள்வார்கள்' என்று சொன்னார்.
வேறு வழி இல்லாமல் நானும் "அதற்கென்ன ,நீங்கள் தாராளமாகக் கொடுங்கள் ,நாங்கள் எடுத்துச் செல்கிறோம்"என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை அனுப்பினோம்.
இது போல இன்னும் சிலரும் தங்கள் பெண் அல்லது பையன் ,பேரன் என்று யாரையாவது சொல்லி சாமான்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் கொடுத்தவற்றை வைக்கவே ஒரு சூட்கேஸ் வந்துவிட்டது.
நாங்கள் எந்த இடங்களைப் பார்க்கவேண்டும் ,எப்படிப் போக வேண்டும் ,என்று பலரும் தங்கள் தங்கள் யோசனையை கொடுக்க ஆரம்பித்தார்கள் .எதோ தாங்களே அமெரிக்கா சென்று வந்தவர்கள் போல சொல்ல ஆரம்பித்தார்கள் .
ஒரு வழியாக எங்களுக்கு வேண்டிய சாமான்களை (மளிகை சாமான்கள் )உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தோம்
இனிமேல் தான் விஷயம் உள்ளது.
நாங்கள் என்ன ஊரைச் சுற்ற வந்தோம் என்று நினைத்தீர்களா? அப்படியெல்லாம் இல்லை.எங்கள் பேரன் பேத்திகளை பார்த்தக் கொள்ள வந்துள்ளோம் .எனவே வந்து இறங்கிய நாளில் இருந்து சரியான் வேலை எங்களுக்கு. வேலைக்கு ஆள் கிடைக்காது .நாங்களே தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும் .நமது ஊரில் கூட இத்தனை வேலை இருந்திருக்காது , அத்தனை கஷ்டம் .இதில் நாங்கள் வந்து இறங்கியது மிகச் சரியான குளிர்காலம் வேறு எதோ வெளியே போனோம் என்று இல்லை, என்றால் . பார்த்துக் கொள்ளுங்கள்.எவ்வளவு கஷ்டம் என்பதை .
அப்போது தான் இங்கு ஒரு நண்பரைப் பார்த்தோம் .
அவர்களைப் பார்த்தபிறகு எங்கள் கஷ்டம் பனி போல விலகியது. அது எப்படி? அது ஒன்றும் இல்லை,அவர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தி ஆகியோர் மாற்றி மாற்றி ஆறு மாதத்திற்கு ஒரு முறை இங்கு வருவார்களாம்.ஏனெனில் அவர்கள் பெண்ணும் மாப்பிளையும் வேலைக்குச் செல்வதால் பேரன் பேத்திகளை மாற்றி மாற்றிப் turn போட்டுக் கொண்டு பார்த்துக் கொள்வார்களாம். இங்கு அவர்களை DAY CARE ல் விடுவது என்பது மிக செலவான கார்யம். அதே போல வேலைக்கு ஆள் என்பது குதிரைக் கொம்பு. அதனால் தான் சம்பளம் இல்லாத! இதுதான் நிறைய வீடுகளில் நடக்ககூடிய சமாசாரம் ..
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு !
"நாங்கள் அமெரிக்கா போகிறோம் "என்று யாராவது சொன்னாள் , எங்களுக்கே உள்ளூர ஒரு சிரிப்பு வரும் .இனி உங்களுக்கும் சிரிப்பு வரும் என்று நினைக்கிறேன் .
அது சரி ,எதற்காக் அந்தப் போட்டோக்களைப் போட்டிருக்காய், என்று தோன்றுகிறதா! அதெல்லாம் சும்மா உங்களுக்காகத் தான்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக