வியாழன், டிசம்பர் 7

அகோபிலம் ப்ரஹலாத வரதர். பகுதி 8





பகுதி 8  அகோபிலம் ப்ரஹலாத வரதர்.
கீழ் அகோபிலத்தில் ப்ர ஹ்லாத வரதர் ஸன்னிதி உள்ளது  என முன் பகுதியில் சொல்லியிருந்தேன்.

ப்ரஹலாத வரதர் சன்னிதி அகோபிலம் ஷேத்ரத்தில்  ப்ராதனமாக உள்ள சன்னிதி யாகும். ஸீலக்ஷ்ம் நரசிம்மர் கிழக்கு நோக்கி உள்ளார். உற்சவர் உபயநாச்சீயாரகளுடன் கூடிய ப்ரஹலாதவரதர் உள்ளார்.அவர்களுக்கு முன்னால் புறப்பாடு கண்டருளும் மூர்த்தியாக பத்து கைகளுடன் ஸீதேவி பூதேவீ ஸமேதராக ஜ்வாலா நரசிம்மன் காட்சியளிக்கிறார். ஸீஅகோபில மடத்தின் ஸ்தாபகரான ஸீஆதிவண்சடகோபஜீயர் ஸ்வாமிகள் பெருமாளை சேவிக்கும் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அர்ச்சா திருமேனியாக காட்சியளிக்கிறார்.

 விஜயநகரப் பேரரரசர்கள் இந்தக் கோயிலுக்கு அதிக தொண்டு ஆற்றியிருக்கிறார்கள்.முன்மண்டபம் மற்றும் தூண்கள் சிற்ப வேலைப்பாடு காண்பவரைக் கொள்ளை கொள்ளத் தோன்றும். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்.
அவைகளின் ஒருசிலவற்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். அடுத்த முறை நீங்கள் செல்லும்போது பாரக்கத் தவறாதீர்கள்.
சென்ற பகுதியில் ப்ரஹலாத வரதரை பார்த்தோம் என்று சொல்லி இருந்தேன். அதன் பிறகு முன் போலவே ஆகாரத்தை வரிசையில் நின்று பெற்றுக்கொண்டோம். முன் பக்கத்தில் உள்ள நாலுகால் மண்டபத்தில் பிரவசனம் நடந்து கொண்டிருந்தது, அதனை ரசித்தோம், பின்னர் ஸ்வாமிகளின் உரையைக் கேட்டு ரசித்து விட்டு, எங்கள் வாலண்டியர் ஆணையிட்டபடி அவர் அவர் பஸ்களில் ஏறி அமர்ந்தோம், கடைசியாக இன்றைக்காவது எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைகளை அடைவோம் என்ற நம்பிக்கையில்!!!!!!
ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்தீர்களா?
கேடகத் தோன்றுகிறதா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக