திங்கள், ஜனவரி 29

இராமானுசா அணு யாத்திரை; பூரி இரண்டாம் பாகம்,

தேர் திருவிழா: பூரி ஜகன்னாதர் தேர் யாத்திரை விஷேஷமானதாகும். உலகப்பிரசித்தி பெற்றது.

ஆம், அந்த தேர் ஓடற வீதியே, உலகத்திலேயே மிக அகலமான வீதியாம். அப்படின்னா பாத்துக்கங்க!!
எவ்வளவு பெரிசா இருக்கும்ன்னு!!!
மற்ற இடங்களில் உள்ளது போல அல்லாமல், இங்க வருஷாவருஷம் தேர புதுசா பண்ணறாங்களாம்.
ஒரு தேர் இல்லிங்க, மூணு தேர் பண்ணறாங்கன்னா பாத்துக்கங்க!!!!
என்னது மூணு தேரா!!!
ஆமாங்க, ஒவ்வொரு வருஷமும், தேரதிருவிழாவுக்கு இரண்டு மாசம் முன்னால 2188 மரத்துண்டுகள இணைச்சு தச்சர்கள் தேர் பண்ணறாங்க.
ஜெகன்னாதர், பலராமர், சுபத்ரா ஆகிய மூவருக்கும் தான் தேர்.

இதில் ஜெகன்னாதர் தேருக்கு நந்தி கோஷ்ன்னு பேராம். தேரின் உயரம் 45 அடி. சக்கரத்தின் உயரம 7 அடி. எத்தனை சக்கரங்கிறீங்க, மொத்தம் 16. வர்ணம் மஞ்சள். சங்கிகா, ரேசிகா, மோசிகா, த்வாலினி, அப்படின்னு பெயர் கொண்ட நான்கு கதிரைகள், தாருகன்னு பெயர் கொண்ட தேரோட்டி 250 அடி நீளமுள்ள சங்கசூடன் என்ற பெயர் கொண்ட தேரக்கயிறை கொண்டதாம்.
பலராமரின் தேர் தாலத்வஜம் ன்னு பேர். 14 சக்கரங்கள், ஒண்ணொண்ணும் 4.4 அடி உயரம். நீல நிறத்தில் தேரச்சீலைகளைக் கொண்டு, ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்ற பெயர் கொண்ட நான்கு குதிரைகளை, மாதவி என்கிற தேரோட்டி, வாசுகி என்ற வடத்தால இழுப்பதாக அர்த்தம்.

பதமத்வஜம் அப்படீங்கிறது ஸுபத்ராவின் தேரின் பெயர். 4.3 அடி உயரமான இந்த தேர், 12 மாதங்களைக் குறிக்க ஏதுவாக, சக்கரங்களைக் கொண்டு இருக்கும். சிவப்பு வர்ணம் கொண்ட திரைச்சீலைகளை பொருத்தி, ப்ரஜ்ஞா, அநுயா, கோஷா, அக்ரி என்ற நான்கு குதிரைகள் பொருத்தப்பட்டு, அரஜுணன்.தேரோட்டியாக, ஸ்வரணசூடன் தேர்கயிறாக இருக்குமாம். ஸுதர்சனர் இந்த தேர்ல கூட வருவாராம்.
தேர் பவனி: தேர் என்ன நாலு வீதிகள் சுற்றி வரும்ன்னு நினைக்கிறீரகளா?
அதான் கிடையாது. 

பின்ன!!
கோயில் வாசல்ல புறப்பட்டு, கிராண்ட் ரோடுன்னு சொல்ற அந்த வீதி வழியா,அந்த ரோட்டின் கடைசில இருக்கும் குண்டிசா மந்திர் அப்படிங்கிற, 2 மைல் தொலைவில் உள்ள கோயிலுக்குப் போய்ச் சேரும். 
அவ்வளவு தான்!!
எப்ப நடக்குது இந்த தேர் பவனி?
ஆனி மாசம் பெளரணமியில் தொடங்கி ஆடி மாசம் சுக்ல சதுர்தசி அன்னிக்கு முடியும்.
என்ன விஷேஷம்ன்னா, 10 வயசு கண்ணன் கோகுலத்தில் இருந்து பிறந்த ஊரான மதுராவுக்கு வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த விழா நடக்குதாம்.
முதலில் பலராமர், அடுத்து ஸுபத்ரா, கடைசியாக ஜகன்னாதர் ஆகியோர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக தேரில் எழுந்தருளுவர். அரசன் தங்கத் துடைப்பத்தால 
அரசர் ரோடை பேருக்கும் காட்சி
வீதியை பெருக்குவார். தேர்கள் புறப்பட்டு மாலை குண்டிசா மந்திர் அடையும். அடுத்த ஒன்பது நாட்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். எல்லாப் பிரசாதங்களும் இங்கேயேஅமுது செய்யப்படும். வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும் பக்தர்கள் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு சேவிக்கலாம்.
தன்னைவிட்டு சென்று விட்டார் என்று கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு குண்டிசா மந்திர் வந்து, ஐகன்னாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரசமநடக்குமாம்.
ஆனி சுக்ல தசமி அன்று, மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருளுவர்.
ஆனால், லக்ஷ்மியின் கோபத்தால் (மட்டையடி உற்சவம்) ப்ரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பர்.
ஆனி சுக்ல ஏகாதசியன்று, இரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்கள் மூர்த்திகள் அணிவர்.இதனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனி சுக்ல துவாதசியன்று பெருமாள் கோயில் உள்ளே எழுந்தருளுவார்.
ஆக ஜகம் புகழும் இந்த தேர் திருவிழா காண உலகமெங்கும் இருந்து பக்தர்கள் படையெடுப்பர் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.

இது மட்டும் இங்கு விஷேஷம்??? 
வேறு என்ன சார் விஷேஷம், பாரப்போமே அடுத்த பகுதியில்!!!!!
போடோக்களுக்கு நன்றிகள்.

வெள்ளி, ஜனவரி 26

இராமானுஜா அனு யாத்திரை: பூரி ஜகன்னாதர். முதல் பகுதி


இராமானுஜா அனு யாத்திரை: பூரி ஜகன்னாதர்.
ஶ்ரீகூர்மத்தில் இருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூரி ஷேத்ரம். இரவு பூரா பயணம் செய்து விடியற்காலை பூரி வந்து சேர்ந்தோம். விடிந்தபிறகு ஊருக்குள் பஸ்களை விடமாட்டாரகள் என்பதால், விடிவதற்கு  முன்னாலேயே வந்துவிட்டோம். வரும் வழியெல்லாம் நல்லமழை.
அதோடேயே சாமான்களை இறக்கி எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்து சிரம பரிகாரம் செய்து கொண்டோம். மூன்று பேருக்கு ஒருஅறை ஒதுக்கியிருந்தார்கள். எனது நீண்டநாட்கள் கனவு பூரி ஜகன்னாதரை தரிசிக்க வேண்டும் என்பது. அது நிறைவேற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது என்பதை நினைக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
மழை விட்டவுடன் ஸ்வாமிகள் சொல்லியிருந்த சக்கர தீர்த்தத்தில் நீராடலாம் என்று தயாராக இருந்தோம். சக்கர தீர்த்தம் என்பது கடற்கரை தான். ஆனால், மழை நிற்பதாகத் தெரியவில்லை. இது சரிப்பட்டுவராது என்று தீர்மானம் செய்தோம். சரி அவரவர் அறையிலேயே நீராடி, காலை ஆகாரம் ஏற்பாடு செய்திருந்த இடத்தை நோக்கி ஆட்டோவை நகர்த்தினோம். சரியான மழை, விடுவதாகத் தெரியவில்லை. பக்கத்திலேயே உள்ள ஹோட்டலில் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு பூரி ஜகன்னாதரை தரிசிக்க ஆவலாகச் சென்றோம்.
கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம்!!
ஒவ்வொருவராக வரிசையில் ஆமை வேகத்தில் நகரந்தோம்.
பெருமாளை அருகில் பார்க்க வரும்போது திரையிட்டுவிட்டாரகள், பெருமாளுக்கு அமுது படைக்க!
காத்திருப்போம் அரைமணி நேரம்.
கண்ணனின் லீலைகளைப் சித்திரமா விதானத்தில் வரைந்து இருந்தார்கள். பார்க்க அருமையாக இருந்தது. ஒடிஷாவைச் சேர்ந்த பல இடங்களில் இருந்து வந்திருந்த யாத்திரிகர்கள் அவர்கள் பாஷையில் பெருமானை பஜனை செய்துகொண்டு அந்த இடத்தை கலகலப்பாக்கிக்கொண்டு இருந்தார்கள். அரைமணி, போனதே தெரியவில்லை.
திரையை விலக்கினார்கள்.
சுபத்ரா, கிருஷ்ணர், பலராமர் ஆகிய மூவரின் மரத்தால் ஆன விக்கிரஹங்கள் ஹாரத்திக்கு இடையே ஜொலித்தன.
என்ன, மரத்தால் ஆன விக்கிரஹங்கள் என்று சொல்லுகிறீர்களே!!
நிஜமாகவா!!
ஆம், மரத்தால் ஆன விக்கிரஹங்கள் தான்!!
இந்த ஷேத்ரம் புனிதமானது. திருமாலின் சங்க வடிவத்தில் இருக்கும் இந்த ஷேத்ரம், சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகச் சொல்கிறார்கள். ஶ்ரீமன் நாராயணன் விடியற்காலையில் பதரியில் நீராடி, த்வாரகாவில் வஸ்தரம் தரித்து, பூரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறாராம்.
சிறந்த விஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்னன் என்ற அவந்தி நகர் அரசன், நாரதர் சொன்னதைக் கேட்டு, நீலமலையில் மண்ணால் மூடப்பட்டு இருக்கும் நீல மாதவனை கனவில் கண்டார். நாரதர் சொல்லியபடி, கிழக்கு கடலில் ஒரு *தாரு* என்ற மர்ம மிதந்து வருவதைக் கண்டார். அதனை ஒரு வஸ்திரத்தில் சுற்றி வைத்தார். அசரீரி சொல்லியபடி, ஒரு தச்சன் லந்து, செதுக்கும் ஒலி வெளியே கேட்காமல் வாத்தியங்கள் ஒலிக்க, செதுக்கத் துவங்குகிறான்.பதினைந்து நாட்கள் ஆனதும் ஒலி நின்றுவிடுகிறது. மன்னன் எவ்வளவு தடுத்தும் கேட்காதத ராணி, விக்கிரஹங்கள் பாதி முடிந்த நிலையில், அசிரீரி அப்படியே தரிசனம் கொடுப்பார் என்றதால்,அன்று முதல் ஜகன்னாதப்பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார்.

கண்ணனின்அஷ்ட மகிஷிகளுக்கு, கோகுலத்தில் நடந்த ரச லீலைகளை ரோகிணி தேவி, காவலுக்கு ஸுபத்ராவை நிறுத்திவிட்டு, விளக்கிக் கொண்டு இருக்கும் போது, கண்ணன், பலராமன் வந்து நின்றதைகவனிக்கவில்லை. இயல்பு நிலையை அடைந்த பார்த்த போது, நாரதர் அங்கு வந்து, ஸுபத்ரா, பலராமன், கிருஷ்ணன் மூவரும் இருந்த திருக்கோலத்த பார்த்த நாரதர், பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்ட, அவ்வாறே இன்றும் காட்சியளிக்கின்றனர்.
சுபத்ரா, கிருஷ்ணன், பலராமர் ஜகன்னாதர், ஆகியோரது திருமேனி மாற்றம்.
எந்த ஆண்டில், ஆனி மாதத்தில், இரண்டு பெளர்ணமிகள் வருகிறதோ, அந்த ஆண்டு, இவர்கள் திருமேனிகள், இதற்கென நியமனம் பெற்று இருக்கும் பூசாரிகள், சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ப்ராசி நதிக்கரையில் காகாத்புர் காடுகளில் தகுந்த வேப்பமரங்களைத் தேடி, சில விஷேஷ அடையாளங்கள் கொண்டவைகளை எடுத்து வந்து கோயலா வைகுந்தத்தில்
அதற்கென அமைந்த தச்சர்கள், பகவான் திருவுருவங்களைச் ணெதுக்குகிறார்கள். அமாவாசை அன்று, இரவு கரப்பகிரஹத்தில் பழைய திருமேனிக்கு அருகில் கொண்டுவந்து வைப்பார்கள்.அன்று இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மூத்த பூசாரி கண்களை மூடிக்கொண்டு, கைகளில் துணியைச் சுற்றிக்கொண்டு, பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரம்மபதாரத்தத்தை புது திருமேனியில் பொருத்துவாரகள். பின் பழைய திருமேனியை வைகுந்தத்தில் பூமிக்கு கீழே எழுந்தருளப்பண்ணுவாரகள். இந்த சடங்குகள் சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெறுமாம். முழுவதும் ரகசியமாக நடத்தப்படும். பழைய திருமேனிக்காக தாயாதிகள் என்ற வரக்கத்தினர் 13நாட்கள் துக்கம் அனுஷிப்பார்களாம். இந்த உற்சவம் நடந்த முந்தைய வருஷம் 1996 ஆம் ஆண்டாம்.
வேறு என்ன சார் பூரில விஷேஷம்?
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!

சனி, ஜனவரி 20

ராமானுஜா அணு யாத்திரை ஸ்ரீகூர்மம்


ஶ்ரீகூர்மம்.
தசாவதாரத்தில கூர்மாவதாரம் முக்கியமானது, இந்திய தேசத்தில் பல ஷேத்ரங்கள் வெவ்வேறு அவதாரங்களுக்கு என கோயில்களைக் கொண்டுள்ளன. வராக அவதாரத்துக்கு என ஒரு ஊர் உள்ளது.  ராமாவதாரத்துக்கு அயோத்தி போன்ற பல ஊர்கள் உள்ளன. 

கிருஷ்ணாவதாரத்துக்கு கேடகவே வேண்டாம். 
ஆனால், கூர்மாவதாரத்துக்கு??
ஆம், எங்களின் இராமானுஜா அனு யாத்திரையின் அடுத்த ஷேதரம்
ஶ்ரீகூர்மம். சிம்மாசனத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவு உள்ள ஶ்ரீகூர்மத்துக்கு இரண்டு மணி பிரயாணத்துக்கு பிறகு வந்து சேர்ந்தோம். கூர்மாவதாரத்துக்கு என அமைந்த ஊர் ஶ்ரீகூர்மம், என்கிற அழகான சிற்றூர். 
ஆமை வடிவில் உள்ள மூலஸ்தானம்












ஆந்திர மாநிலத்தில் உள்ளது. ஊரெல்லாம் ஆமையாக இருக்கும் எனபதால, அவைகளை கூட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்கள்.
சின்ன கிராமம் தான் ஶ்ரீகூர்மம்.

கோயில் முகப்பு


கோயில் முகப்பில் மந்திர மலையை கடையும் சிற்பம்
மந்திரமலையை கடையும் போது கடலுக்குள் சென்றுவிடாமல் கூர்மாவதாரம் எடுத்து தாங்கினார் பெருமான். அதனை சிற்ப வடிவமாக உள்ளே நுழையும் போது மேலே ஆரச்சில் வடிவமைத்துள்ளாரகள்.
சிறிது தூரம் சென்றால் கோயில் காணப்படுகின்றது.. சின்ன கோயில் தான். கோயிலின் தல வரலாறு வைத்துள்ளார்கள். கோயிலின் வலப்புறத்திலேயே நிறைய ஆமைகள், வெளியே 
வந்துவிடாமல் இருக்க, அவைகளை கூண்டில் அடைத்து வைத்துள்ளார்கள். கோயிலின் பிரசாரத்தில் நான்கு புறமும், 108 தூண்கள். 

ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
கரப்பகிரஹத்தின் உள்ளேயே சென்று பெருமாளை சேவிக்கலாம். சந்நனக்காப்பு இட்டுள்ளார்கள். திவ்ய தரிசனம் கிடைத்து பாக்யம் பெற்றோம்.
பிரசாரத்தில் தசாவதாரத்துக்கும் சிற்ப வடிவில் வைத்துள்ளார்கள்,
கோவிலில் ஸ்வாமிகள் அந்தக் கோவிலின் மகாத்மியத்தை விளக்கினார்.
33 பஸ்களும் ஊருக்குள் சென்று வருவதில் சிறிது சிரமம் ஏற்பட்டது.
அற்புதமான ஒரு அவதாரத்துக்கான ஒரு ஷேத்ரத்தை சேவித்த மனதோடு அடுத்த முக்கியமான, நீண்ட நாள் கனவு,  ஊருக்கு கிளம்பினோம். 
எந்த ஊர்?

பார்ப்போம், அடுத்த ஊரில்!!!!!


புதன், ஜனவரி 10

இராமானுஜ அனு யாத்திரை சிம்மாசலம்.




















இராமானுஜ அனு யாத்திரை சிம்மாசலம்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திவ்யதேசங்களில் இதுவும் முக்கியமானதாகும்.
இங்கு ஶ்ரீமன் நாராயணன் வராக நரசிம்மராக அவதரித்தார்.
ஷேத்திர விஷேஷம்.
ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்துகிறான். இங்கு இருக்கும் (விசாகப்பட்டினம் அருகில் உள்ளது, அழகிய கடற்கரையை கொண்டது) கடலில் தள்ளிவிடுகிறான். ப்ரஹலாதன் “தராகீ, தராகீ”, என பகவானை சரண் அடையக் கூப்பிடுகிறான். கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், தன்னுடைய பீதாம்பரம் அவிழந்துவிட்டதைக் கட்டி முடிந்தால் நேரமாகிவிடும் என்பதால், அதனைக்கூட முடியாமல், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் உள்ள கட்டை விரலால், கருடனுக்கு வாயில் அமிர்தத்தை கொடுத்துக் கொண்டு, குதிக்கிறார். குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விடுகின்றன .ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள எடுத்து போர் புரிகிறாராம். அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். சிறிது காலம் ப்ரஹலாதன் இவரை ஆராதித்துவிட்டு தன்னுடைய ராஜயத்திறகு திரும்புகிறார். சிறிது காலம் பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போலவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிடுகிறது.
பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தை கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபடுகிறது. என்ன காரணம் என்று திகைக்கிறார். கனவில் வந்து, “நான் இங்குள்ள காங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில்” இருப்பதாகச் சொல்ல, அவரை எழுந்தருளப்பண்ணி, காங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்கிறான். அந்த நாள் அக்ஷ்யதிருதியை எனப்படும் நாள். அந்த நாள் மட்டும் பெருமான் நிஜரூப தரிசனத்தில் காட்சியளிக்கிறார்.
மற்ற நாட்களில் சந்தனகாப்பு தரிசனம் தான்.
சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறாரகள். எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
வேளுக்குடி ஸ்ஸவாமிகளின் இராமானுஜ அனு யாத்திரை இரண்டாம் பகுதியில், அகோபிலம், பத்ராசலம் ஆகியவற்றைப் தரிசித்துவிட்டு,
பத்ராசலத்தில இருந்து இரவு புறப்பட்டோம் என்று முந்தைய பகுதியில் முடித்து இருந்தேன். கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவு உள்ளது பத்ராசலத்தில் இருந்து. காலை7 மணிவாக்கில் வந்து சேர்ந்தோம். சுற்றி மலையாக உள்ளது ஊர். எங்களுக்கு ஒரு ஹால் மற்றும் சிறிய அறை கொடுத்தார்கள். எல்லோரும் காலைக்கடனகளை முடித்துக்கொண்டு உடனே கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், எல்லோரும் குளிப்பதற்கு அலைந்தோம். எங்களுக்கு முன்னர் வந்து குளித்து தயாராக இருந்தவர்களிடம் குளியல் அறையை பயன்படுத்த அனுமதிக்க கேட்டோம். என்னவோ அறை தங்களது போன்று சிலர் பயன்படுத்த யோசித்தனர்
எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள், இவர்கள் எல்லாம் நாலு பேரோடு செல்ல தகுதியற்றவர்கள்.
ஸ்வாமிகள் அடிக்கடி சொல்வார், “கூடியிருந்து குளிரவேண்டும” என்று. அதனை புரிந்துகொள்ளாதவரகள். இவர்களை என்னவென்று சொல்வது?
எப்படியோ, அடித்துபிடித்து, குளித்துவிட்டு எங்கள் பஸ்ஸிலியே ஏறி சிம்மாசலம நோக்கி பயணமானோம். சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போல.

தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள். பெருமானை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருதுன்னு தெரியல, ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் புரோஷித்துக்கொண்டோம். ஸ்வாமிகள் கல்யாண உற்ச
சிம்மாசலம் பெருமாள்
வத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள், அதனை தரிசித்துக்கொண்டு, கல்யாண சமையல் ஏற்பாடு செய்து இருந்த அதில் பங்குகொண்டோம். மாலை 3 மணியளவில்,
 உடையாளூர் அவர்களின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். மாலை 6 மணியளவில் உற்சவர் வராக நரசிம்மர் கருடவாகனத்தில் புறப்பாடு கண்டருளினார். நம்மூரில வாகனத்தில் ஏளப்பண்ணுவது போல அல்லாமல், வாகனம் தனியாக பெருமாள் தனியாக உலா வருகிறார். பின்னர் ஸ்வரண கவசத்தில் மூலவர் சேவை, மின்னுவதை தரிசித்தோம். ஆகாரம் அங்கேயே விநியோகித்தார்கள், அதனை முடித்துக்கொண்டு மலையில் இருந்த அரசு வாகனத்தில் அறைகளுக்கு திரும்பினோம்.
மறுநாள் ஶ்ரீகூர்மம். முக்கியமான ஸ்தலம்.
எப்படின்னு கேட்கிறீரகளா?

பார்ப்போம், அடுத்த பகுதியில்!!!!!!

புதன், ஜனவரி 3

இராமானுஜ அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 3











இராமானுஜ அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 3
சென்ற பகுதியில் பத்ராசலம் பற்றியும், பக்த ராம்தாஸ் எப்படி கோயிலை பராமரித்தார் என்பதையும் பார்த்தோம். ஒரு நாள் முழுக்க அங்கு தான் இருக்கவேண்டும். முன்னரே நான் சொன்னமாதிரி, எங்கள் மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரையை நோக்கி ஆட்டோவில் பயணமானோம். நதி அருகில் தான் உள்ளது. நடந்து கூட போய்விடலாம்.
நதிக்கரை பார்க்கவே ரம்மியமாக இருந்தது. சூரியன் அப்போது தான் ஸ்நானம் பண்ண வந்து உள்ளான். அகலமான நதி. படகு சவாரி இருந்தது.
நிறையபேர் இக்கரையில் இருந்து அக்கரை நோக்கி பயணப்பட்டார்கள்.
தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.நாங்களும் ஸ்நானம் செய்தோம்.




உடை மாற்றிக்கொண்டு கரையில் சிறிது நேரம் காலார நடந்தோம். வேடிக்கை என்னவென்றால், கரையிலேயே ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் போயக்கொண்டிருந்தன. அவ்வளவு அகலமான கரை. வெகு அருகாமையில் பத்ராசல ராமர் கோயில் ஒரு குன்றின் மேல அமைந்துள்ளது கரையில் இருந்து தெரிகிறது.நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டு பத்ராசல ராமரை தரிசிக்கச் சென்றோம்.
முன்னே  சொன்ன மாதிரி கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய படிக்கட்டுக்கள் இல்லை. முதலிலேயே ராமர் பாதம் தரிசித்துக்கொண்டோம். மூலவர் ராமர் சன்னிதி, முன்னாலேயே சொன்னமாதிரி, ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ஆசீர்வதிக்கிறார்.
பக்தராமதாஸ் பயன்படுத்திய பொருட்களை காட்சியாக வைத்து, உள்ளே செல்ல கட்டணத்துடன் அனுமதிக்கிறார்கள்.
விசாலமான கூடத்தில் சீதா கல்யாணத்துக்கு ஸ்வாமிஜி ஏற்பாடு செய்து இருந்தபடியால், நாங்கள் எல்லோரும் அங்கேயே அமர்ந்து பங்கெடுத்துக்கொண்டோம். மதியம் அருகில் உள்ள கல்யாணமண்டபத்தில் கல்யாண சாப்பாடு முடித்துக்கொண்டு அறைக்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம். மாலையில் ஸ்வாமிஜி உபந்யாசம் முடிந்து ஆகாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பயணம், சிம்மாசலம் நோக்கி.
சிம்மாசலம்!!!!!!
முக்கியமான ஷேத்ரம், எப்படி என்கிறீர்களா?

பார்ப்போம் சிம்மாசலத்தில் அடுத்த பகுதியில்!!!!!