திங்கள், ஜனவரி 29

இராமானுசா அணு யாத்திரை; பூரி இரண்டாம் பாகம்,

தேர் திருவிழா: பூரி ஜகன்னாதர் தேர் யாத்திரை விஷேஷமானதாகும். உலகப்பிரசித்தி பெற்றது.

ஆம், அந்த தேர் ஓடற வீதியே, உலகத்திலேயே மிக அகலமான வீதியாம். அப்படின்னா பாத்துக்கங்க!!
எவ்வளவு பெரிசா இருக்கும்ன்னு!!!
மற்ற இடங்களில் உள்ளது போல அல்லாமல், இங்க வருஷாவருஷம் தேர புதுசா பண்ணறாங்களாம்.
ஒரு தேர் இல்லிங்க, மூணு தேர் பண்ணறாங்கன்னா பாத்துக்கங்க!!!!
என்னது மூணு தேரா!!!
ஆமாங்க, ஒவ்வொரு வருஷமும், தேரதிருவிழாவுக்கு இரண்டு மாசம் முன்னால 2188 மரத்துண்டுகள இணைச்சு தச்சர்கள் தேர் பண்ணறாங்க.
ஜெகன்னாதர், பலராமர், சுபத்ரா ஆகிய மூவருக்கும் தான் தேர்.

இதில் ஜெகன்னாதர் தேருக்கு நந்தி கோஷ்ன்னு பேராம். தேரின் உயரம் 45 அடி. சக்கரத்தின் உயரம 7 அடி. எத்தனை சக்கரங்கிறீங்க, மொத்தம் 16. வர்ணம் மஞ்சள். சங்கிகா, ரேசிகா, மோசிகா, த்வாலினி, அப்படின்னு பெயர் கொண்ட நான்கு கதிரைகள், தாருகன்னு பெயர் கொண்ட தேரோட்டி 250 அடி நீளமுள்ள சங்கசூடன் என்ற பெயர் கொண்ட தேரக்கயிறை கொண்டதாம்.
பலராமரின் தேர் தாலத்வஜம் ன்னு பேர். 14 சக்கரங்கள், ஒண்ணொண்ணும் 4.4 அடி உயரம். நீல நிறத்தில் தேரச்சீலைகளைக் கொண்டு, ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்ற பெயர் கொண்ட நான்கு குதிரைகளை, மாதவி என்கிற தேரோட்டி, வாசுகி என்ற வடத்தால இழுப்பதாக அர்த்தம்.

பதமத்வஜம் அப்படீங்கிறது ஸுபத்ராவின் தேரின் பெயர். 4.3 அடி உயரமான இந்த தேர், 12 மாதங்களைக் குறிக்க ஏதுவாக, சக்கரங்களைக் கொண்டு இருக்கும். சிவப்பு வர்ணம் கொண்ட திரைச்சீலைகளை பொருத்தி, ப்ரஜ்ஞா, அநுயா, கோஷா, அக்ரி என்ற நான்கு குதிரைகள் பொருத்தப்பட்டு, அரஜுணன்.தேரோட்டியாக, ஸ்வரணசூடன் தேர்கயிறாக இருக்குமாம். ஸுதர்சனர் இந்த தேர்ல கூட வருவாராம்.
தேர் பவனி: தேர் என்ன நாலு வீதிகள் சுற்றி வரும்ன்னு நினைக்கிறீரகளா?
அதான் கிடையாது. 

பின்ன!!
கோயில் வாசல்ல புறப்பட்டு, கிராண்ட் ரோடுன்னு சொல்ற அந்த வீதி வழியா,அந்த ரோட்டின் கடைசில இருக்கும் குண்டிசா மந்திர் அப்படிங்கிற, 2 மைல் தொலைவில் உள்ள கோயிலுக்குப் போய்ச் சேரும். 
அவ்வளவு தான்!!
எப்ப நடக்குது இந்த தேர் பவனி?
ஆனி மாசம் பெளரணமியில் தொடங்கி ஆடி மாசம் சுக்ல சதுர்தசி அன்னிக்கு முடியும்.
என்ன விஷேஷம்ன்னா, 10 வயசு கண்ணன் கோகுலத்தில் இருந்து பிறந்த ஊரான மதுராவுக்கு வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த விழா நடக்குதாம்.
முதலில் பலராமர், அடுத்து ஸுபத்ரா, கடைசியாக ஜகன்னாதர் ஆகியோர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக தேரில் எழுந்தருளுவர். அரசன் தங்கத் துடைப்பத்தால 
அரசர் ரோடை பேருக்கும் காட்சி
வீதியை பெருக்குவார். தேர்கள் புறப்பட்டு மாலை குண்டிசா மந்திர் அடையும். அடுத்த ஒன்பது நாட்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். எல்லாப் பிரசாதங்களும் இங்கேயேஅமுது செய்யப்படும். வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும் பக்தர்கள் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு சேவிக்கலாம்.
தன்னைவிட்டு சென்று விட்டார் என்று கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு குண்டிசா மந்திர் வந்து, ஐகன்னாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரசமநடக்குமாம்.
ஆனி சுக்ல தசமி அன்று, மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருளுவர்.
ஆனால், லக்ஷ்மியின் கோபத்தால் (மட்டையடி உற்சவம்) ப்ரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பர்.
ஆனி சுக்ல ஏகாதசியன்று, இரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்கள் மூர்த்திகள் அணிவர்.இதனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனி சுக்ல துவாதசியன்று பெருமாள் கோயில் உள்ளே எழுந்தருளுவார்.
ஆக ஜகம் புகழும் இந்த தேர் திருவிழா காண உலகமெங்கும் இருந்து பக்தர்கள் படையெடுப்பர் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.

இது மட்டும் இங்கு விஷேஷம்??? 
வேறு என்ன சார் விஷேஷம், பாரப்போமே அடுத்த பகுதியில்!!!!!
போடோக்களுக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக