வெள்ளி, பிப்ரவரி 2

இராமானுஜா அனு யாத்திரை; பூரி மூன்றாம் பகுதி..மகாபிரசாதம்


இராம்னுஜா அணு யாத்திரை; பூரி மூன்றாம் பகுதி..
சென்ற பகுதியில் தேர் திருவிழா பற்றி கூறியிருந்தேன். அதுமட்டுமல்ல, 
வேறு ஒன்றும் விஷேஷம், அது மகாபிரசாதம்.
அப்படி என்ன சார் முக்கியம் பிரசாதத்தில்?
கேட்பது நியாயம் தான்!
கதையை கேளுங்கள், பின்னால் சொல்லுங்கள் நியாயமா இல்லையான்னு.
உலகில் ஜகன்னாதருக்கு நைவேத்தியம் பண்ணப்பட்ட பிரசாதம், யாருக்கும் கிடைக்காமல் இருந்தது. அதனை சமைத்து கண்டருளப்பண்ணும் மஹாலக்ஷ்மியிடம் நாரதர் தனக்கு பிரசாதம் வேண்டும் என நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியில் மஹாலக்ஷ்மி மனதுவைத்து பெருமானிடம் மன்றாடி நாரதருக்கு சிறிது பெற்றுக்கொடுத்தார். ஆனந்தத்தின் எல்லைக்கே போன நாரதரைப் பார்த்த பரமசிவன் தனக்கும் வேண்டினார். நல்லவேளையாக பிரசாதம் சிறிது இருக்கவே அதனை பரமசிவன் உண்டு ஆனந்தக்கூத்தாடினார். கைலாசமும், மஹாமேருவும் குலுங்குவதைக் கண்ட பார்வதி தனக்கும் பிரசாதம் வேண்டினார். ஆனால் பிரசாதம் இல்லாத்தைக் கண்டு கோபித்த பார்வதி அம்மையார், “இனி உலகில் அனைவருக்கும் ஜகன்னாதர் பிரசாதம் எப்போதும் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று சூளுரைத்தார். அவரது பக்தியை மெச்சிய பகவானும் “இனி பூரியில் அன்ன ப்ரஹம்மாகவே இருப்பேன்” என்று அருளினார்.
ஆக, மற்ற ஷேத்ரங்கலில் பெருமானை தரிசித்தாலோ, த்யானித்தாலோ, வலம் வந்தாலோ, ஸங்கீரத்தனம் செய்தாலோ, கிடைக்கும் புண்ணியம், பூரியில் ஜகன்னாதர் பிரசாதத்தை உண்பதாலேயே பாவங்கள் விலகிவிடுமாம்.
அப்படி ஒரு விஷேஷம் பூரி ஜகன்னாதர் திருத்தலத்துக்கு என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
அது மட்டுமா?
சமையல் கட்டு எப்படி?
மிகப்பெரிய சமையல் கட்டு!!
ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள, இந்த சமையல் கட்டு, கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. மூன்றுக்கு நாலு என்ற அளவு கொண்ட 752 அடுப்புகள் உள்ளன. விற்கு கட்டைகள், சட்டி பானைகள் தவிர எந்த விதமான உலோகங்களோ எந்திரங்களோ பயனபடுத்தப்படுதில்லையாம். சுமார் 20 படிக்கட்டு இறங்கினால் இருக்கும் கிணற்றில் இருந்து, இராட்டினத்தைப் பயன்படுத்தாமல் கைகளால் தாம்புக்கயிற்றைப் பயன்படுத்தி 30 தொண்டர்கள் சுத்தமான தண்ணீரை கொண்டுவந்து கொட்டுவார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், தக்காளி ஆகிய காய்கறிகளைப் பயன்படுத்தாமல் 400 முக்கிய கைங்கரயபரர்கள் மற்றும் 400 உதவியாளர்களும், சமைக்கிறார்கள். காய்கறி திருத்தவும், தேங்காய் திருவவும் 100 பேர் உள்ளனராம். வேற்று மனிதர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
சாதாரண நாட்களில் 72 குவிண்டாலும்,விஷேஷ நாட்களில் 90 குவிண்டாலும் சமைக்கப்படுகின்றனவாம். பாறைகளில் ஏற்றப்பட்டுசிறு உறிகளில் ஏற்றப்பட்டு மூங்கில் கம்பிகளின் இருபுறமும் தொங்கவிடப்பட்டு கைங்கர்யபரர்கள் தோளில் சுமந்துகொண்டு பெருமான் முன்னே  படைப்பார்கள். இதற்கென 60 பேர் உள்ளன்றாம்.
இது மட்டுமா?
ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றனவாம். சித்ரான்னம்  9 வகையாம், கறியமுது மற்றும் கூட்டு வகை 14 வகையாம், பால் பாயாசம் 9 வகையாம், 11 வகையான தித்திப்பு வகைகள், 13 வகையான  திருப்பநியாரங்கள்.
பாத்திங்கள்ள?
இது மட்டுமா? 
ஐந்து வகையான போகங்கள் பெருமானுக்கு வெவ்வேறு நேரங்களில் படைக்கப்படுகின்றனவாம்.
கோபால் வல்லப போகம் காலை 8 மணிக்கு முதல் போகம்.
காலை 10 மணிக்கு ஸகல போகம்.
பகல் 11 மணிக்கு போக மண்டப விநியோக போகம்.
மதியம் 12.30 மணிக்கு மத்யாஹ்ந போகம்.
மாலை 7 மணிக்கு ஸயன போகம்.
இரவு 11.15 மணிக்கு மகாசிருங்கார போகம் 
இப்படி ஒரு நாளைக்கு பெருமான் இத்தனை விதமான அமுது சாப்பிடுகிறார என்றால் பாத்துக்கங்க!!!
இதைத்தவிர வேறென்ன விசேஷம்?
பாப்போமே அடுத்த பகுதியில்!!!!!!!!
with gratitude

http://www.jagannath.nic.in/?q=node/479

https://food.ndtv.com/food-drinks/jagannath-temple-mahaprasad-700-cooks-for-50-000-pilgrims-1202045

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக